வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்தநாள் | அண்ணா பல்கலை., பட்டமளிப்பு விழா – News In Photos

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பூ சந்தையில் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையான செண்டுமல்லிப்பூ, நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிலோ 20-ரூபாய்க்கு விற்பனையாகி கேரளாவுக்கு ஏற்றுமதியானது.
புதுச்சேரி:

அன்னை தெரேசா நினைவுநாளை முன்னிட்டு, அவரின் உருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் முதல்வர் ரங்கசாமி.

புதுச்சேரி:

ஆசிரியர் தினத்தையொட்டி புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பாராட்டினர்.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ஆதரவாளர்கள் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
வேலூர், காட்பாடி வட்டம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததயொட்டி காட்பாடி வட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
கோகுலாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் இந்து வித்யாலயா மழலையர் பள்ளி சிறுவர்-சிறுமிகள் கிருஷ்ணர், ராதை என பல்வேறு வேடங்கள் அணிந்து நாகராஜா கோயில் ரதவீதிகளில் ஊர்வலமாக வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுற்றுச்சூழலை பாதிக்காத விதமாக புதுச்சேரியில் 550 கிலோ காகிதத்தால் உருவாகும் பிரமாண்டமான விநாயகர் சிலை.
சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த 43-வது பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.
வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்தநாளினை முன்னிட்டு, தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட இன்று ஒருநா‌ள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி:

வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்ததினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், மணிமண்டபத்தில் அமைந்திருக்கும் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திருநெல்வேலி:

வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்தநாளில் அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மணிமண்டபத்தில் அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுதினார்.

கோகுலாஷ்டமிக்காக நாக்பூரிலிருந்து சென்னைக்கு வந்திருக்கும் கிருஷ்ணன் பொம்மைகள்.
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சுப்பராயனின் முழுவுருவச்சிலை திறப்பு.
சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சுப்பராயனின் முழுவுருவச் சிலையை சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சுப்பராயனின் முழுவுருவச் சிலையை சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவியர்கள் ஆசிரியருக்கு பூ கொடுத்து வரவேற்றனர்.
விருதுநகர் நகராட்சி, முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது
ஈரோடு :

பள்ளிகளில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு கிருஷ்ணர் வேடமணிந்து வந்த சிறுவர், சிறுமிகள்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் வள்ளல் பாரி அரசுப் பள்ளியில் மாணவ மாணவியர் கேக் வெட்டி ஆசிரியர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.