ஹலசூரு,: ஹலசூரு பான்பெருமாள் கோவில் கிருஷ்ணா மந்திரில் நாளையும், நாளை மறுநாளும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கருட வாகன உற்சவம் நடக்கிறது.
கிருஷ்ண ஜென்மாஷ்டமியை ஒட்டி, நாளை காலையில் கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம், பிரபந்த சேவாகாலம், சாத்துமுறை, ஆரத்தி தீர்த்த பிரசாதம் வினியோகம்; மாலையில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி கருட வாகன உற்சவம் நடக்கிறது.
7ம் தேதி காலையில் கிருஷ்ண ஜெயந்தி டோலோற்சவம், அபிஷேகம், பிரபந்த சேவாகாலம், சாத்துமுறை, ஆரத்தி தீர்த்த பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது.
பக்தர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கோவில் தலைவர் அடியேன் ஏகமூர்த்தி பட்டர் சுவாமிகள், பிரதான அர்ச்சகர் விஷ்ணு சுதன் பட்டர் கேட்டு கொண்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement