எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 5G மொபைலை இந்தியாவில் வெளியிடுவதற்கான அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நோக்கியா நிறுவனம் ட்விட்டரில்(X) தெரிவித்துள்ளது. நோக்கியா மொபைல் இந்தியா என்ற அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் நோக்கியா 5G ஸ்மார்ட்போனின் வேகத்தை அனுபவிக்க தயாரா? என்ற கேப்ஷனோடு செப்டம்பர் 6ம் தேதி வெளியாக இருக்கும் அப்டேட்டுக்காக காத்திருங்கள் என்றும் பதிவில் பகிர்ந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் வெளியான நோக்கியா G42 5G மொபைல்தான் இந்தியாவில் வெளியாகலாம் என்றும் டெக் உலகில் வைரலாக பரவி வருகிறது. எச்எம்டி குளோபல் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட முதல் Self-Repairable ஸ்மார்ட்போன் இந்த Nokia G42 5G தான். தற்போது செப்டம்பர் 6ம் தேதி இந்த மொபைல்தான் இந்தியாவில் நோக்கியாவின் 5G மொபைலாக வெளியாக போகிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, நோக்கியா G42 5G-ல் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நோக்கியா ட்வீட்Nokia G42 5G ப்ராசஸர் மற்றும் சார்ஜிங்Nokia G42 5G மொபைலில் Qualcomm Snapdragon 480 SoC ப்ராசஸர் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், 5000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
Nokia G42 5G டிஸ்பிளேNokia G42 5G – ன் மாடலில் 6.56-இன்ச் HD+ LCD (1612 x 720 பிக்ஸல்ஸ்) டிஸ்பிளே மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும், 560 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் கொரில்லா க்ளாஸ் 3 ப்ரொடெக்ஸன் வழங்கப்பட்டுள்ளது.
கேமராNokia G42 5G – ல் பின்பக்கம் 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்ஸல் டெப்த் மற்றும் மேக்ரோ வசதி வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 8 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
Nokia G42 5G – ன் நிறம், ஸ்டோரேஜ் மற்றும் விலைNokia G42 5G மொபைல் க்ரே மற்றும் பர்ப்பில் ஆகிய இரண்டு நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 11GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதி, 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதி ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதன், 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்திய மதிப்பில் 20,800ரூபாய் விலையில் விற்பனையாகி வருகிறது.