Ola S1X – ஓலா எஸ்1எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கியது

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிக குறைந்த விலை S1X ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதாக இந்நிறுவன சிஇஓ தெரிவித்துள்ளார். ரூ.90,000 முதல் துவங்குகின்ற இந்த மாடல் ரூ.1,10,000 வரை நிறைவடைகின்றது.

எஸ்1 எக்ஸ் மாடலில் 2Kwh மற்றும் 3Kwh பெற்ற S1X , S1X  பிளஸ் என இருவிதமாக விற்பனைக்கு கிடைக்கின்றது.

Ola S1X escooter

ஓலா எஸ்1எக்ஸ் மாடலில் 2Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக 85 kmph வேகம் பெற்று சிங்கிள் சார்ஜில் 91 கிமீ பயணிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நிகழ்நேரத்தில் அனேகமாக 60 கிமீ வரையிலான ரேஞ்சு கிடைக்கலாம். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.1 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.

ஓலா எஸ்1எக்ஸ் 3Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக 90 kmph வேகம் பெற்று சிங்கிள் சார்ஜில் 151 கிமீ பயணிக்கலாம்.  எனவே, நிகழ்நேரத்தில் அனேகமாக 120 கிமீ வரையிலான ரேஞ்சு கிடைக்கலாம். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.3 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.

S1X 2kwh மற்றும் S1X 3kwh என இரு மாடலிலும் 3.5 அங்குல கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் இல்லாமல் வந்துள்ளது. வழக்கமான கீ ஆனது உள்ளது.

டாப் S1X+ வேரியண்டில் 5 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டரில் ப்ளூடூத் இணைப்பு மூலம் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றதாகவும் கீலெஸ் அன்லாக் உள்ளது.

Ola S1X 2 kwh – ₹ 89,999

Ola S1X 3kwh – ₹ 99,999

Ola S1X+ – 1,09,999

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.