Realme C51 Launched : 8,999 ரூபாய் விலையில் 50MP கேமரா, 5000mAh பேட்டரி, அதிநவீன ப்ராசஸருடன் இந்தியாவில் வெளியானது Realme C51!

Realme நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள Realme C51 மொபைலின் சிறப்பம்சங்கள் என்ன, அதன் செயல்பாடு, ஸ்டோரேஜ், மற்றும் விலை குறித்த விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம். இரண்டு கலர் வேரியண்டில் பட்ஜெட் ஃப்ரண்ட்லி விலையில் வெளியாகியுள்ள சீன தயாரிப்பு மொபைலான இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

​Realme C51 ப்ராசஸர்Realme C51-ல் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வசதியோடு கூடிய octa-core Unisoc T612 SoC ப்ராசஸர் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் Android 13 out-of-the-box அடிப்படையில் இயங்குகிறது.
​Realme C51 C51டிஸ்பிளேRealme C51 -ல் 6.74 இன்ச் HD (720 x 1600 பிக்ஸல்ஸ்) டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதியோடு இடம்பெற்றுள்ளது. மேலும், 180Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 560நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இடம்பெற்றுள்ளது.
​Realme C51 கேமராRealme C51-ல் டூயல் ரியர் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பின்புறம் 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்புறம் 5 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா இடம்பெற்றுள்ளது.
​Realme C51 நிறம் மற்றும் ஸ்டோரேஜ்Realme C51 மொபைல் மின்ட் க்ரீன் மற்றும் கார்பன் ப்ளாக் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மொபைல் , 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் வசதி மற்றும் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வசதி ஆகிய இரு வேரியண்ட்டுகளில் வெளியாகி உள்ளது.
​Realme C51 பேட்டரிRealme C51 -ல் 5000mAh திறன் கொண்ட பேட்டரி மற்றும் 33W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இஇதன் மூலம் வெறும் 28 நிமிடங்களில் சார்ஜ் செய்தால் 50 சதவீதம் வரை சார்ஜ் ஏறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
​Realme C51 விலை விவரம்இரு ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் Realme C51 கிடைக்கிறது. இதன் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 8,999ரூபாய் விலைக்கு வெளியாகியுள்ளது. இதன் மற்றொரு வேரியண்ட்டின் விலை குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.