Samsung Galaxy M04: ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனை அப்கிரேட் செய்யும் எண்ணத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? குறைந்த பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். சாம்சங் ஸ்மார்ட்போனில் கிடைக்கும் ஒரு ஒப்பற்ற டீலை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங்கின் ஒரு அசத்தலான போனில் ஒரு நல்ல டீல் வந்துள்ளது. சாம்சங் கேலக்சி எம்04 (Samsung Galaxy M04) ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்களுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் ஒரு சிறந்த சலுகையில் விற்கப்படுகிறது. இந்த சலுகைகளை பார்த்தால் தற்போது போன் வாங்கும் எண்ணத்தில் இல்லாத வாடிக்கையாளர்களுக்கும் இதை வாங்கத் தொன்றும். அந்த அற்புதமான சலுகைகளை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Samsung Galaxy M04: விலை மற்றும் சலுகைகள்
Samsung Galaxy M04 இன் 64GB மாறுபாடு பிளிப்கார்ட்டில் 11,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அமேசானில் 29% தள்ளுபடிக்குப் பிறகு இது ரூ.8,499 க்கு கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு இதில் அமேசானில் எக்ஸ்சேஞ்ச் சலுகை அதாவது பரிமாற்ற சலுகைகள் கிடைக்கும். ஆனால் பிளிப்கார்ட்டில் இது கிடைக்காது. அதே நேரத்தில், அமேசானில் எச்எஸ்பிசி வங்கி அட்டையில் ரூ. 250 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இதனுடன், உங்களுக்கு ரூ. 8050 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகைக்கு பிறகு அதன் விலை ரூ. 449 ஆகிறது. இதை நீங்கள் எளிதாக ஆர்டர் செய்து வாங்கலாம்.
Samsung Galaxy M04: அம்சங்கள்
Samsung Galaxy M04 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி பேசினால், இதில் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கிடைக்கும். இது 720 x 1600 பிக்சல் ரெசல்யூஷனுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான OneUI இயங்குதளத்தில் வேலை செய்கிறது. ஹீலியோ பி35 சிப்செட் இதில் செயலாக்கத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் விர்ச்சுவல் ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்தில் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பவருக்காக சிறந்த 5000 mAh பேட்டரி போனில் வழங்கப்பட்டுள்ளது. கேமராவைப் பற்றி பேசுகையில், இது 13 மெகாபிக்சல் பிரைமரி கேமராவை ஆதரிக்கிறது. இணைப்பு வசதிகளுக்காக இது வைஃபை, புளூடூத் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
கூடுதல் தகவல்:
அமேசான் சேல் 2023 இல் மலிவு விலையில் தொழில்நுட்பத்தின் அட்டகாசமான படைப்புகளை அனுபவிக்கலாம். சாம்சங், எல்ஜி, மற்றும் சியோமி போன்ற புகழ்பெற்ற பிராண்டுகளின் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுடன் உங்கள் பொழுதுபோக்கை மேம்படுத்துங்கள். இவை அனைத்தும் ரூ. 15,000 க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன என்றால் யாராலும் அதை நம்ப முடியாது. ஆனால் அது உண்மை!! அதிநவீன அம்சங்கள், துடிப்பான காட்சிகள் மற்றும் தடையற்ற இணைப்பு விருப்பங்களை இவற்றில் அனுபவிக்கலாம். உங்கள் டிவி பார்க்கும் அனுபவத்தை உண்மையிலேயே குறிப்பிடத்தக்க வகையில் இந்த அசத்தல் டிவி-கள் மாற்றுகின்றன.
அதிக செலவு இல்லாமல் உங்கள் டிவி பார்க்கும் தரத்தைதாக இவை மாற்றும். அமெசானின் அதிரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெற இப்போதே ஷாப்பிங் செய்யவும். அமெசானில் ஸ்மார்ட் டிவி -களுக்கான மிகச்சிறந்த டீல்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.