Thala Ajith Kumar : பல கோடி பேருக்கு அவருதான் முன்னோடி ! தல அஜித்துக்கு ஆசிரியர் தின வாழ்த்து கூறிய பிரபலம் !

செப்டம்பர் 5, முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள். அவரின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். அனைவரும் அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வரும் நேரத்தில், நடிகர் ஜான் கொக்கின் தல அஜித் அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து, ஜான் கொக்கின் அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அஜித் அவர்களின் என்னை அறிந்தால் படத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு எமோஷனலான கேப்ஷனும் போட்டிருக்கிறார் ஜான்.

நடிகர் ஜான் கொக்கின்

என்னதான் பிரிந்துபோனாலும் !! சமந்தாவை விசாரித்தார் அவர் !!

“கடவுளால் அனைத்து இடங்களிலும் இருக்க முடியாது, எனவே தான் ஆசிரியர்களை உருவாக்கி இருக்கிறார். அவர்கள் தான் நம் வாழ்வில் நல்ல வழியில் போக நம்ம வழிநடத்துவார்கள், அப்படி எனக்கு மாட்டுமல்லாமல் இன்னும் பல கோடி பேருக்கு வழிநடத்தும் வெளிச்சமாக இருப்பதற்கு நன்றி அஜித் சார். என் வாழ்வில் வந்து, என் வாழ்வை நல்லதாக்கியதற்கும், என்னால் முடியும் என என்னை செய்ய வைத்ததற்கும் நன்றி சார். ஐ லவ் யு சார், உங்கள் அன்பிற்கும் பரிவிற்கும் மிக்க நன்றி, கடவுள் எப்போதும் உங்களை ஆசீர்வதிப்பார், அதிக அன்புடன் ஜான் கொக்கின். அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருக்கிறார்.

View this post on InstagramA post shared by John Kokken (@highonkokken)
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த பதிவிற்கு பலரும் கமெண்ட் பதிவிட்டிருக்கிறார்கள். அதில், “ப்ரௌட் தல ரசிகை, தல போல வருமா, பைக் ரைடிங் தான பன்றாருனு நினைச்சோம், அது இல்லாம தல நிறைய பன்றாரு போல” போன்ற கமெண்டுக்களுக்கு லைக்ஸ் குவிகிறது.

அஜித் – ஜான் கொக்கின்

ஜான் கொக்கின் வில்லனாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் ஒஸ்தி, வீரம், சார்பட்டா பரம்பரை, பொய்க்கால் குதிரை, துணிவு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஜான் கொக்கின் அஜித்துடன் இணைந்து வீரம், துணிவு என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Guest Author : Radhika Nedunchezhian

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.