வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு பதில் பிரதமர் லி கெகியாங் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடனான உறவு சீராக உள்ளது. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்த அனைவருடனும் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக சீனா கூறியுள்ளது.
பீஜிங்கில் பத்திரிகை நிருபர்களை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் சந்தித்தார். அப்போது இந்தியா – சீனா இடையிலான உறவில் நிலவும் பதற்றம் காரணமாக அதிபருக்கு பதில் பிரதமர் செல்ல உள்ளாரா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மாவோ நிங் அளித்த பதில்: இந்தியா சீனா இடையிலான உறவு அனைத்து மட்டத்திலும் சுமுகமாக உள்ளது. பல்வேறு மட்டத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை நடத்தி வருகின்றன. இரு நாட்டு மக்களின் நலன்களை அடிப்படையாக வைத்து இந்தியா – சீனா இடையிலான உறவு மேம்பட்டு வருகிறது. இரு தரப்பு உறவுகளை இன்னும் மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்.
இந்த ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியா நடத்துவதற்கு சீனா முழு ஆதரவை அளித்தோம். இந்த மாநாட்டை வெற்றிகரமாக ஆக்குவதற்கு அனைவருடனும் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். ஜி20 அமைப்பு என்பது சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பிற்கான அமைப்பு. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement