புதுடில்லி, தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், ஆசியான் – இந்திய மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு நடக்க உள்ளது.
இதில் பங்கேற்க தனி விமானம் வாயிலாக நேற்று மாலை பிரதமர் மோடி, இந்தோனேஷியா புறப்பட்டுச் சென்றார்.
இந்திய நேரப்படி, இன்று காலை 7:00 மணிக்கு ஆசியான் – இந்திய மாநாட்டிலும், காலை 8:45 மணிக்கு, கிழக்கு ஆசிய மாநாட்டிலும், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இந்த பயணத்தை முடித்து, இன்று மாலை 7:00 மணி அளவில், அவர் புதுடில்லி வந்தடைகிறார். இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோருடன், நாளை பேச்சு நடத்த உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement