இலங்கை, ஆப்கானிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி

இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான 2023 ஆசிய கிண்ண ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நேற்று (05) 2 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இதன்படி, பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று B குழுவின் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்ற இலங்கை அணி, இவ்வருட ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்குத் தகுதிபெற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 92 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க 41 ஓட்டங்களையும், சரித் அசலங்க 36 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக Gulbadin Naib 4 விக்கெட்டுக்களையும், Rashid Khan 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதில் இன்னிங்சை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.1 ஓவர்களில் 289 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பந்துவீச்சில் கசுன் ராஜித 4 விக்கெட்டுக்களையும், மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, தனஞ்சய சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அணித்தலைவர் Hashmatullah Shahidi 59 ஓட்டங்களையும், Mohammad Nabi 65 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணிக்கு கடினமான போட்டியை கொடுத்தனர்.

இதன்படி, கடும் போட்டியின் பின்னர் இலங்கை அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியுடன் சுப்பர் 4 சுற்றுக்குள் நுழைய முடிந்தது. சுப்பர் 4 சுற்றில் இலங்கை பங்கேற்கும் முதல் போட்டிகள் பங்கலாதேஷூக்கு எதிராக எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.