இளம் ஹீரோவை வைத்து தான் முதல் படம்: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போடும் பிளான்.!

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க மாட்டேன் என அடம்பிடித்து இயக்குனராக மாறிவிட்டார் தளபதி விஜய்யின் ஜேசன் சஞ்சய். யாரும் எதிர்பார்க்காத விதமாக அண்மையில் இவர் இயக்க போகும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தில் யாரை ஹீரோவாக வைத்து படம் இயக்க போகிறார் என்பது தான் கோலிவுட் சினிமாவின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர் விஜய். கோலிவுட் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் இவரை வைத்து ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என்பது தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வரும் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். இப்படி ஒரு ஹீரோவை வீட்டுக்குள்ளே வைத்து கொண்டு ஜேசன் சஞ்சய் யாரை தனது முதல் படத்தில் இயக்க போகிறார்.?

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதைத்தான் விஜய் ரசிகர்கள் அவர்களுக்குள்ளேயே கேட்டு கொண்டே இருக்கின்றனர். ரசிகர்களின் இந்த குழப்பத்திற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்திலே எந்தவொரு முன்னணி நடிகரையும் இயக்க போவதில்லையாம். இளம் நடிகரை வைத்தே தனது முதல் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

தற்போதைக்கு அவருடைய லிஸ்டில் கவின், ஹரிஸ் கல்யாண், அதர்வா உள்ளிட்டோர் இருப்பதாக கூறப்படுகிறது. ‘டாடா’ படத்தின் வெற்றிக்கு பின்பு கவினின் மார்கெட் எங்கயோ சென்று விட்டது. இதனையடுத்து அவரின் அடுத்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஹரிஸ் கல்யாணும் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

தளபதியின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தின் ஹீரோ இவரா.?

அதர்வா ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்ற காத்திருப்பில் இருக்கிறார். இவர்களின் யாரை ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தில் இயக்க போகிறார் என்பதை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருந்து தான் ஆக வேண்டும்.

தளபதியின் மகனான விஜய்யை நடிகராகக பல முன்னணி நடிகர்கள் முயற்சி செய்தனர். ‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன் புத்திரன் கூட அவருக்காக கதை ரெடி பண்ணி இருந்தார். ஆனாலும் வெளிநாட்டில் சினிமா மேக்கிங் குறித்த கோர்ஸ் முடித்த ஜேசன், இயக்குனராகும் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

Vijay: விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்.?: பரபரக்கும் கோலிவுட்.!

இந்நிலையில் தான் அண்மையில் லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் முன்னிலையில் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்திற்காக கையெழுத்திட்ட போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. இதனையடுத்து திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.