ஒரு வழியா தேதி குறிச்சாச்சு… நாளை விண்ணில் பாய்கிறது ஜப்பானின் 'ஸ்லீம்'.. நிலவில் தரையிறங்குவது எப்போது?

ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா முதல் முறையாக நாளை நிலவு பயணத்தை தொடங்க உள்ளது.

ரஷ்யா லூனா 25நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்வதற்காக ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கடந்த மாதம் 21 ஆம் தேதி நிலவி மோதி நொறுங்கியது. நிலவி தரையிறக்குவதற்கு முன்பான சுற்றுப்பாதையை குறைத்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது. இதையடுத்து ரஷ்யாவின் இந்த திட்டம் தோல்வியை தழுவியதாக அறிவிக்கப்பட்டது.சந்திரயான் 3இருப்பினும் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் அதில் இருந்த பிரக்யான் ரோவர் ஆகியவை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை செய்து பிரமிக்க வைத்துள்ளன.
​ உதயநிநி ஸ்டாலினுக்கு திருப்பதி தேவஸ்தானம் கடும் கண்டனம்.. பூதாகரமாகும் ‘சனாதனம்’ பேச்சு!​நிலவுக்கு செல்லும் ஜப்பான்இந்தியாவின் சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தில் ஆக்ஸிஜன் இருப்பது தெரியவந்தது. மேலும் கந்தகம் உள்ளிட்ட பல்வேறு தனிமங்கள் இருப்பதையும் பிரக்யான் ரோவர் கண்டுபிடித்தது. இந்நிலையில் இந்தியா, ரஷ்யாவை தொடர்ந்து ஜப்பானும் நிலவை ஆய்வு செய்ய ஸ்லீம் என்ற விண்கலத்தை அனுப்ப உள்ளதாக அறிவித்தது. மூன் ஸ்னைப்பர் (moon sniper) என இந்த திட்டத்திற்கு பெயர் வைத்துள்ளது ஜப்பான்.
ஒத்திவைக்கப்பட்ட திட்டம்இதற்காக ஜப்பானின் விண்வெளி நிறுவனமாக ஜாக்ஸா, ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து நிலவை ஆய்வு செய்வதற்காக எச்.2.ஏ. ராக்கெட் மூலம் ஸ்லீம் விண்கலத்தை ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த திட்டம் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது.
​ திருப்பதி : விஐபி தரிசனத்தில் சூப்பர் ஆஃபர்: தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!​நாளை காலைஇந்நிலையில் இந்திய நேரப்படி நாளை காலை 4.40 மணிக்கு ஸ்லீம் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக ஜப்பான் விண்வெளி நிறுவனமான JAXA தெரிவித்துள்ளது. இதன் மூலம் முதல் முறையாக ஜப்பான் நிலவில் தறையிறங்க உள்ளது. சுமார் 4 மாத பயணத்திற்கு பிறகு ஜப்பானின் ஸ்லீம் விண்கலம் நிலவை சென்றடையும்.
​ ஓணம் பம்பர் லாட்டரி: ரூ. 25 கோடியை வெல்லப்போவது யார்? பரபரக்கும் டிக்கெட் விற்பனை… விற்று தீர்ந்த 50 லட்சம் டிக்கெட்டுகள்!​200 கிராம் எடைSLIM (Smart Lander for Investigating Moon) விண்கலத்தின் எடை 200 கிராம் மட்டுமே ஆகும். நிலவின் மேற்பரப்பில் விரும்பும் இடத்தில் தரையிறகும் நோக்கத்திற்காகவே ஜப்பான் இந்த ஸ்லீம் விண்கலத்தை விண்ணில் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
​ திருப்பதியில் தமிழக பக்தர்களுக்கு சூப்பர் ஆஃபர்.. அலைமோதும் கூட்டம்… நிரம்பி வழியும் வைகுந்தம் காம்ப்ளக்ஸ்!​​ஜப்பான் ரெடி​​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.