ஹாசன் : சிறைக்குள் கஞ்சா வீச முயன்ற, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹாசன் அமீர் மொஹல்லாவில் மாவட்டச் சிறை உள்ளது. நேற்று முன்தினம் இரவு சிறையின் பின்பக்க பகுதியில், ஹாசன் டவுன் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது மூன்று பேர் சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர்கள் கையில் வைத்திருந்த ஒரு பையில் சோதனை நடத்தியபோது ஆப்பிள், தர்ப்பூசணி பழங்களுடன் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதையடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள், தப்ரேஸ், 28, வாசிம், 21, ரகீப், 23, என்பது தெரிய வந்தது.
சிறைக்குள் கைதிகளாக இருக்கும், நண்பர்களுக்காக வெளியே இருந்து, கஞ்சா வீச முயன்றது தெரிந்தது. சில நாட்களுக்கு முன்பு, ஹாசன் சிறையில் சோதனை நடத்திய போலீசார், கைதிகள் அறையில் இருந்து மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
கைதிகளுக்கு உதவிய சிறை ஊழியர்கள், நான்கு பேர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement