வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்தியாவில் சனாதானம் குறித்து உதயநிதி பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லி நகரில், செப்.,3 ம் தேதி சனாதான நாளாக கடைப்பிடிக்கப்படும் என அந்நகர மேயர் அறிவித்துள்ளார்.
லூயிஸ்வில்லியின் நகரில் நடந்த ஹிந்து கோயில் கும்பாபிஷேகத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற நகர துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் ஸ்மித், சனாதான நாள் குறித்த மேயரின் அறிவிப்பை வாசித்தார்.
இந்த விழாவில் ஆன்மிக தலைவர்களான, ரிஷிகேஷில் உள்ள பார்மார்த் நிகேதன் பீட தலைவர் சிதானந்த் சரஸ்வதி, ரவிசங்கர், பக்வதி சரஸ்வதி, துணை கவர்னர் ஜாக்லின் கோல்மென் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement