தனுஷ் விட்டாலும் அவரை விடாத முதல் காதல்

காதல் கொண்டேன் படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற இடத்தில் அதன் ஹீரோவை முதல் முறையாக பார்த்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நட்பாக பழகத் துவங்கி அது காதலாக மாற அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

லியோவில் ரஜினியா.? தலையே சுத்துதுப்பா.!
காதலின் அடையாளமாக யாத்ரா, லிங்கா ஆகியோர் பிறந்தார்கள். ஆனால் பிள்ளைகள் வளர்ந்த பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்கிறார்கள்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

பிரிந்துவிட்டாலும் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. ஒரு கல்யாணமே போதும் அப்பா என்று சொல்லிவிட்டாராம் தனுஷ். அவரும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேரக்கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷின் முதல் காதலி குறித்து சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

ராஞ்சனா படம் மூலம் பாலிவுட் சென்றார் தனுஷ். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்தார். தனுஷின் நடிப்பை முதல் முறையாக பார்த்த பாலிவுட் ரசிகர்கள் மிரண்டு தான் போனார்கள். ரஜினியின் மருமகன் பயங்கரமாக நடித்திருக்கிறாரே என பாராட்டினார்கள்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்

அந்த ராஞ்சனா படத்தை விளம்பரம் செய்தபோது தான் தன் முதல் காதல் பற்றி பேசினார் தனுஷ். அவர் கூறியதாவது,

எனக்கு அப்பொழுது 16 வயது இருக்கும். எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருந்தது. அது தான் என் முதல் காதல். அந்த பெண் வேறு ஒரு பள்ளியில் படித்தார்.

அவரை பின்தொடர்ந்தேன். ஒரு பெண்ணுக்காக ஒரு பையன் செய்யும் அனைத்தையும் செய்தேன். அவர் என் காதலை ஏற்றார். ஆனால் ஓராண்டு கழித்து என்னை பிரிந்து சென்றுவிட்டார்.

என்னை பொறுத்தவரை அது காதல் தான். அவர் என்னை பிரிந்து சென்ற பிறகு அது கிரஷ் என்று சில ஆண்டுகள் நினைத்தேன். இல்லை அது காதல் தான் என்பதை மூன்று ஆண்டுகள் கழித்தே உணர்ந்தேன்.

என் முதல் காதல் பற்றி ஐஸ்வர்யாவுக்கு தெரியும். திருமணத்திற்கு முன்பே அவரிடம் கூறிவிட்டேன். உண்மையை சொல்லிவிடுவது நல்லது என்றார்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் ஒரே ரொமான்ஸ்: ச்ச்சோ ச்வீட்

ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு படுபிசியாக படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த பட வேலை முடிந்த கையோடு டி50 படத்தை இயக்கி வருகிறார்.

சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் செட்டில் இரவு, பகலாக ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார். டி50 பட வேலை முடிந்ததும் ஓய்வு எடுக்கப் போவது இல்லை.

அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார். தனுஷும், ரஷ்மிகா மந்தனாவும் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.