டில்லி மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. நேற்று டில்லியில் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் வியூக கூட்டம் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்புக் […]
