சென்னை: கலாநிதி மாறன் ரஜினிக்கு காரை பரிசாக அளித்தது விஜய்யை வெறுப்பேற்றத்தான் என இணையத்தில் பரவி வரும் செய்திக்கு ரமேஷ் பிரபா விளக்கம் கொடுத்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை குவித்து வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பு இருந்த அனைத்து விதமான சர்ச்சைக்கும் ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் ரஜினி பதிலடி கொடுத்துவிட்டார்.