மோடிக்கு சோனியா எழுதிய கடிதம்… சிறப்பு கூட்டத்தொடருக்கு நாங்க ரெடி? நிகழ்ச்சி நிரல் இதோ!

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தை நோக்கி தேசிய அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறதா? என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. ஏனெனில் இதுதொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவும், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

சிறப்பு கூட்டத்தொடர்

அதிலும் எந்தவித நிகழ்ச்சி நிரலும் இன்றி சிறப்பு கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் மத்தியில் குழப்பமும் நீடித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லை

அதில், வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு கூட்டத்தொடருக்கு நீங்கள் ஏற்பாடு செய்துள்ளீர்கள். ஆனால் பிற அரசியல் கட்சிகளுடன் இதுபற்றி எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை. இந்த கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் என்னவென்று எங்களிடம் எந்த தெளிவும் இல்லை.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோனியா காந்தி கடிதம்

எங்களுக்கு தெரிந்தது எல்லாம் 5 நாட்கள் சிறப்பு கூட்டத்தொடர் நடக்கப் போகிறது என்பது மட்டும் தான். அதேசமயம் இந்த கூட்டத்தொடரில் பொதுமக்கள் நலன் சார்ந்த விஷயங்களை விவாதிக்க நல்வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள விரும்புகிறோம்.

மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதம்

இதற்காக நாங்கள் முன்வைக்கவுள்ள விஷயங்களுக்கு நாடாளுமன்ற விதிமுறைகளின்படி உரிய நேரம் ஒதுக்கப்படும் என்று நம்புகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்று சோனியா காந்தி குறிப்பிட்டவை…

விவாதிக்க நாங்க ரெடி

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேற்குறிப்பிட்ட விஷயங்களை விவாதிக்க அனைத்து தரப்பினரும் போதிய ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.