![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/NTLRG_20230906133123724868.jpg)
விஜய் 68ல் பிரசாந்த், பிரபுதேவா?
லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் இந்த படத்திற்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதோடு அமெரிக்காவில் இந்த படத்தின் கேரக்டருக்காக டெஸ்ட் லுக்கும் விஜய்க்கு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் சினேகா, பிரியங்கா மோகன் என இருவரும் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பிரசாந்த், பிரபுதேவா என இருவருடனும் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.