ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் கீழ் 4 சூப்பர் அணிகளுக்கு இடையிலான சுற்றுப் போட்டிகள் அடிப்படை அட்டவணைப்படி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்திலேயே நடைபெறவுள்ளது.
இந்த நாட்களில் கொழும்பில் பெய்து வரும் மழை காரணமாக இறுதிப் போட்டி உள்ளிட்ட 4 சூப்பர் அணிகளுக்கிடையிலான போட்டிகளை ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் நாட்களில் மழை குறைவடையலாம் என்ற எதிர்பார்ப்புடன், போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யாமல் இருக்க போட்டி ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
4 சூப்பர் அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டிகளின் அனைத்துப் போட்டிகளும் செப்டம்பர் 09 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு, இறுதிப் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஆரம்பமான ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரின் 3 போட்டிகள் பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றதுடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டம் மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது.