Atlee: அட்லீ தன் மனைவி ப்ரியாவிற்கு இப்படி தான் ப்ரொபோஸ் செய்தாராம்..வித்யாசமா இருக்கே..!

தமிழ் சினிமாவில் தற்போது டாப் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் அட்லீ. என்னதான் கடந்த நான்கு ஆண்டுகளாக அட்லீயின் படம் வெளியாகாமல் இருந்தாலும் இன்றும் முன்னணி இயக்குனராகவே இருந்து வருகின்றார். தற்போது தமிழையும் தாண்டி பாலிவுட் வரை சென்று மாஸ் காட்டி வருகின்றார் அட்லீ. ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கியதன் மூலம் தற்போது இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குனராக அட்லீ உருவெடுத்துள்ளார்.

இப்படம் நாளை திரையில் வெளியாகும் நிலையில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ஜவான் படத்தை காண ஆவலாக இருக்கின்றது. ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற இப்படம் ரசிகர்களுக்கு ஒரு கமர்ஷியல் விருந்து படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

வித்யாசமாக ப்ரொபோஸ் செய்த அட்லீ

இந்நிலையில் அட்லீ தன் காதல் மனைவியான பிரியாவிற்கு எப்படி ப்ரொபோஸ் செய்தார் என்பது பற்றி தெரியவந்துள்ளது. அட்லீ கடந்த 2013 ஆம் ஆண்டு ப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ப்ரியா கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தார். மேலும் ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார் ப்ரியா.

Jawan: ஜவான் படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..ஹைப்பை ஏற்றிய பிரபலம்.!

அந்த சமயத்தில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த ப்ரியாவை முதல் முறையாக அட்லீ சந்தித்துள்ளார். முதலில் இருவரும் நண்பர்களாகவே பழகி வந்தனர். இந்நிலையில் இப்படி நண்பர்களாக பழகி வந்த காலகட்டத்தில் தான் ப்ரியாவின் வீட்டில் அவரின் திருமணத்திற்காக மாப்பிளை பார்க்க துவங்கியுள்ளனர்.

வெளியான தகவல்

இந்த விஷயத்தை அட்லீ மற்றும் தன் நண்பர்களுடன் கலந்து பேசியுள்ளார் ப்ரியா. மேலும் நிறைய மாப்பிளைகளின் போட்டோ வந்துள்ளதாகவும், அதில் ஒரு மாப்பிள்ளையை

பார்த்து செலக்ட் செய்யவேண்டும் என்றும் ப்ரியா கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அட்லீ தன் போட்டோவை ப்ரியாவிடம் கொடுத்து, இதையும் மாப்பிள்ளை லிஸ்டில் சேர்த்துக்கோ என கூறிவிட்டு சென்றுள்ளார். இதன் மூலம் அட்லீ ப்ரியாவிடம் மறைமுகமாக ப்ரொபோஸ் செய்துள்ளார். இதை புரிந்து கொண்ட ப்ரியா அட்லீயின் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ப்ரியாவை திருமணம் செய்த பிறகு அட்லீ விஜய்யுடன் இணைந்து மூன்று படங்களை இயக்கி வெற்றிகண்டு முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.