சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது சரியல்ல என்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்திய பிறகும் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது ஏன்? மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். “அனைவருக்கும் உள்ள ஒரே கேள்வி, உயர்நீதிமன்றம் கூறிய பிறகும், செந்தில் பாலாஜியை அமைச்சராகவே வைத்திருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புவதில் உள்ள மர்மம் என்ன என்பதுதான்”,என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சட்டவிரோத […]