திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கைகளில் தடி| Pilgrims go to Tirumala with sticks in their hands

திருப்பதி,திருமலைக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் கைகளில் தடி கொடுத்தனுப்பும் பணியை நேற்று தேவஸ்தானம் துவங்கியது.

திருமலை மலைப்பாதையில் கடந்த மாதம் 7 வயது சிறுமி, சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி, திருமலைக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் கையில் தடியை கொடுத்துஅனுப்ப முடிவு செய்யப்பட்டது. பக்தர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள இந்த வழியை தேவஸ்தானம் மேற்கொண்டது.

நடைபாதையில் செல்லும் 30,000 பக்தர்களுக்கும் தடியை தயார் செய்த பின், இந்த பணியை துவங்க முடிவு செய்யப்பட்டது. தடிகள் தயார் செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலை அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் சென்ற பக்தர்களுக்கு தடிகள் வழங்கப்பட்டன.

அலிபிரியில் தடிகள் பெற்றுக் கொள்ளும் பக்தர்கள், திருமலைக்கு சென்ற பின், அந்த தடியை ஊழியர்களிடம் திருப்பி அளிக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.