"நான் அந்த அரசியலுக்குள் போகவில்லை.." – சர்ச்சை கேள்விக்கு வடிவேலு பதில்

நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்திருந்த நடிகர் வடிவேலு. சமீபத்தில் நடித்திருந்த மாமன்னன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடித்தது பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

“இவ்வளவு நாள் நடித்த மொத்த படங்களுக்கும் இது ஒத்த படம் ஈடாகும். அந்த பாத்திரத்தையும் செய்ய முடியும் என்று மாமன்னனில் நிரூபித்திருக்கிறோம்.” என்று மாமன்னன் படத்தில் நடித்தது குறித்து வடிவேலு தெரிவித்துள்ளார்.

வடிவேலு

இதனிடையே மதுரை வந்த நடிகர் வடிவேலு விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது

“சந்திரமுகி இரண்டாம் பாகம் எப்படி வந்துள்ளது?”

“சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினி சார் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். ரொம்பவும் சுவாரஸ்யமாக வந்திருக்கிறது. முதல் பாகத்தில் அதே முருகேசன் கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது, நீங்கள் பாருங்கள், பார்த்துவிட்டு சொல்லுங்கள்.”

” ரஜினியுடன் நடித்த நீங்கள் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்சுடன் நடித்தது எப்படி இருந்தது?”

“அது அவர் ஸ்டைலு, இது இவர் ஸ்டைலு. ரஜினியோட சிஷ்யன் தானே இவரு, அவர் ஒரு மாஸ், இவர் ஒரு மாஸ். இரண்டு பேருடனும் நடித்தது நன்றாக இருந்தது.”

‘மாமன்னன்’ வடிவேலு

“அடுத்தடுத்து படங்கள் நடிப்பீர்களா? ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்க்கிறார்கள்…”

“ஏன், இப்ப என்ன நாடகமா நடித்துக் கொண்டிருக்கிறேன்…?”

“மாமன்னன் திரைப்படத்தில் நடித்ததை எப்படி பார்க்கிறீர்கள்..?”

“இவ்வளவு நாள் நடித்த மொத்த படங்களுக்கும் இது ஒத்த படம். அந்த பாத்திரத்தையும் செய்ய முடியும் என்று மாமன்னனில் நிரூபித்திருக்கிறோம்.”

“சந்திரமுகியில் என்ன கேரக்டரில் வருகிறீர்கள்?”

” சந்திரமுகியில் திகில் கலந்த காமெடியில் நடித்திருக்கிறேன். முருகேசன் பேயிடம் மாட்டிக்கொண்டு எவ்வளவு பாடுபடுகிறான் எனது இந்த படத்திலும் பார்ப்பீர்கள்.”

வடிவேலு செய்தியாளர்களிடம் பேசும்போது

“இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவது குறித்து…?”

“நான் அந்த அரசியலிலுக்குள் போகவில்லை, போகும்போது சொல்கிறேன்…”

“பான் இந்தியா திரைப்படம் கலாசாரம் குறித்து…?”

“அதை வைத்து பெரிய அளவில் பிசினஸ் செய்கிறார்கள். ஒரே ரீலை சுற்றிக் கொண்டிருந்தால் கொட்டாம்பட்டியை தாண்ட மாட்டோம். எல்லா பக்கமும் பெரிய அளவில் பிசினஸ் ஆக பான் இந்தியா திரைப்படங்கள் தேவைப்படுகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.