நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது திவான்(19). அவரும் அவரின் நண்பர் பாலிடெக்னிக் மாணவர் அப்துல்லா(18) ஆகியோர் நேற்று இரவில் பைக்கில் அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். அவர்கள் மாட்டுச் சந்தை அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த வாகனம் மோதிய வேகத்தில் இருவரும் சாலையோரம் தூக்கி வீசப்பட்டு பாலத்த காயமடைந்துள்ளனர். ஆனால், அந்த வாகனம் நிறுத்தப்படாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. அந்த வழியாக வந்தவர்கள் அதைப் பார்த்து இருவருக்கும் உதவியதுடன் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய முகமது திவான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பரும் பாலிடெக்னிக் மாணவருமான அப்துல்லா பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடியுள்ளார். அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இருவரின் உடலையும் மீட்ட போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர். விபத்து நடத்திய வாகனத்தை அடையாளம் காணும் வகையில் அந்த சலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். சாலை விபத்தில் ஒரே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவருக்குமே தலையில் மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது. ஹெல்மெட் அணிந்து பயணம் செய்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியும். இனியாவது இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் விபத்து ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY