பெங்களூரு, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய, ‘சந்திரயான் – 3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கலனை, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘நாசா’வின், ‘லுானார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர்’ புகைப்படம் எடுத்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில், ஆக., 23ல், ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின், சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கலன், திட்டமிட்டபடி தரையிறங்கி சரித்திரம் படைத்தது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து, ‘பிரஜ்ஞான் ரோவர்’ கலன் வெளியே வந்து, நிலவில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது.
தற்போது நிலவில் இரவு நேரம் என்பதால், இந்த இரு கலன்களும் உறக்க நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் தரைஇறங்கிய, சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கலனை, நாசாவின், லுானார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்துள்ளது.
இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நாசா, ‘சுற்றியுள்ள பிரகாசமான ஒளிவட்டத்திற்கு அருகே, விக்ரம் லேண்டர் இருண்ட நிழல் தெரிகிறது. நிலவின் தென் துருவத்தில் இருந்து, 600 கி.மீ., தொலைவில் லேண்டர் நிலை கொண்டுள்ளது’ என, தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement