Jawa 42 Bobber – ₹ 2.25 லட்சத்தில் ஜாவா 42 பாபர் பிளாக் மிரர் விற்பனைக்கு வெளியானது

ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம், 42 பாபர் பிளாக் மிரர் பைக் மாடல் விற்பனைக்கு ரூ.2.25 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளாக் மிரர் என்று அழைக்கப்படும் இதன் தற்பொழுது கிடைக்கின்ற மற்ற நிறங்களை விட ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை விலை கூடுதலாகும்.

முழுமையாக கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள 42 பாபர் மாடலில் 334cc லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது.

Jawa 42 Bobber Black Mirror

லிக்யூடு கூல்டு 334cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 29 hp பவர் மற்றும் 32.7 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.  புதுப்பிக்கப்பட்ட ஃப்யூவல் மேப், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கியர் & இன்ஜின் கவர் போன்ற புதுப்பிப்புகளையும் பெறுகிறது.

ஜாவா 42 பாபரின் புதிய பிளாக் மிரர் பதிப்பு மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை கொண்டு க்ரோம் பூச்சு பெற்ற பெட்ரோல் டேங்க், மற்றும் முழுமையான கருப்பு நிறத்தை கொண்டதாக அமைந்துள்ளது. மேலும், மற்ற வேரியண்டுகளில் ஸ்போக் வீல் இருப்பதைப் போலல்லாமல், பிளாக் மிரர் டயமண்ட் கட் அலாய் வீல் கொண்டுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஃபோர்க்குகளை பெற்று 18 அங்குல வீலை கொண்டு பின்புறத்தில் ஒற்றை மோனோ ஷாக் அப்சார்பரை கொண்டு 17 அங்குல வீலை பின்புறத்தில் கொண்டுள்ளது. 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றதாக டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டதாக அமைந்துள்ளது.

ஜாவா 42 பாபர் மிஸ்டிக் காப்பர், மூன்ஸ்டோன் ஒயிட் மற்றும் ஜாஸ்பர் ரெட் வண்ணங்களில் கிடைக்கிற மாடல் விலை ரூ. 2.12 லட்சத்தில் ரூ. 2.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். புதிய 42 பாபர் பிளாக் மிரர் பைக் மாடல் விற்பனைக்கு ரூ.2.25 லட்சம் ஆகும்.

jawa 42 bobber mirror black engine jawa 42 bobber

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.