சென்னை: Vetrimaaran (வெற்றிமாறன்) வெற்றிமாறன் சிகரெட்டை விட்ட சீக்ரெட் குறித்து அவரது மனைவி ஆர்த்தி பேசியிருக்கிறார். இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிஅய் விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார்.