அடுத்த 5 நாளைக்கு தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலரான சஞ்சய் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு பருவமழைநாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடநத் ஜூன் மாதம் பருவமழை தொடங்கிய நிலையில் மூன்று மாதங்கள் நிறைவடைந்த பிறகும் கூட இன்னும் மழையளவு பற்றாக்குறையாகதான் உள்ளது. பருவமழையின் மத்திய மாதமான கடந்த ஆகஸ்ட் மாதம் பெரிதாக மழை பெய்யவில்லை.நல்ல மழை பெய்யும்122 ஆண்டுகளுக்கு பிறகு மிக மோசமான பருவமழையை பெற்ற மாதம் என்றும் பருவமழைக்கிடையில் வறண்ட மாதம் என்றும் பதிவானது. செப்டம்பர் மாதத்துடன் பருவ மழை நிறைவடைய உள்ள நிலையில் இந்த மாதம் நல்ல மழை பெய்யும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
ஜி 20 மாநாடு: தினை தாலி.. மசாலா தோசை… தால்பாடி சுர்மா.. தங்கத்தட்டில் பரிமாறப்படும் பாரம்பரிய சைவ உணவுகள்!தெலுங்கானா கனமழை
அதன்படியே தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. ஹைதராபாத்தில் கொட்டிய கனமழையால் பலப்பகுதிகளிலும் வெள்ள நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
தமிழகத்திலும் மழைதமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவ்வப்போது பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
பிங்க் நிற புடவையில் படுக்யூட்டாக இருக்கும் கிரித்தி ஷெட்டி… குவியும் ஹார்ட்டின்கள்!ரெட் அலர்ட்சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலரான சஞ்சய், தென் மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என தெரிவித்துள்ளார். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் என குறிப்பிட்டுள்ளார்.
ரூ. 6800 கோடியில் 2 ரயில் பாதைகள்… தெலுங்கானாவுக்கு அடித்த ஜாக்பாட்!அடுத்த 5 நாட்கள் மிக கனமழைமேலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் இதில் நல்ல செய்தி காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அடுத்த 15 நாட்களுக்கு பருவமழை தீவிரமடைந்து, நல்ல தண்ணீர் வரத்து இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.மக்கள் மகிழ்ச்சிதனியார் வானிலை ஆர்வலரான சஞ்சயின் இந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள் அப்படியானால் காவிரியில் தமிழகத்திற்கு தாராளமாக தண்ணீர் கிடைக்குமா என கேட்டு வருகின்றனர். இன்னும் பல நெட்டிசன்கள், பயிரெல்லாம் கருகி வரும் நிலையில், உங்களின் செய்தி நிம்மதி அளித்துள்ளது என பதிவிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் க்ரீன் கார்டு – காத்திருக்கும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!சஞ்சய் வெதர் டிவீட்டி