வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்த பின் தெரிவித்தால் இந்தியாவின் பெயரை ‘பாரத், என மாற்றம் செய்யப்படும் ஐ.நா.,செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நடக்க உள்ள ‘ஜி – 20’ நாடுகளின் உச்சி மாநாடு, பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ளது.இதில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் விருந்து அழைப்பிதழில், ‘தி பிரசிடென்ட் ஆப் இந்தியா’ என்பதற்கு பதில், ‘தி பிரசிடென்ட் ஆப் பாரத்’ எனவும், பிரதமர் மோடியின் சமீபத்திய இந்தோனேஷியா சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலிலும், ‘தி பிரைம் மினிஸ்டர் ஆப் பாரத்’ எனவும், அச்சிடப்பட்டிருந்தது.
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது குறித்து அரசு தரப்பு கோரிக்கை அனுப்பினால் அதையும் பரிசீலிப்போம் என ஐ.நா. பொதுச்செயலர் ஆன்டோனியே குட்டரெசின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ளர்.
இந்நிலையில் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஐ.நா. பொதுச்செயலரின் உலகளவிய செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறியது, “இந்தியா பெயரை மாற்றுவதற்கான அனைத்து சம்பிரதாயங்கள் முடித்ததும், எங்களுக்கு தெரிவித்தால், ஐ.நா. அலுவலக பதிவேடுகள் மற்றும் ஆவணங்களில் ”பாரத்” என மாற்ற நடவடிக்கை எடுப்போம் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement