தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்றைய தினம் அளித்துள்ள பேட்டி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது, மாநில அரசின் பேருந்துகளில் உடல் பருமனாக இருப்பவர்களும் பயணிக்க ஏதுவாக பேருந்துகளில் சீட் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது. கடந்த மாதமே இதுதொடர்பாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, அரசு பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கை 57ஆக இருந்தது. இந்நிலையில் உட்காருவதற்கு இடையூறு இல்லாத வகையில் புனரமைக்கப்படும். இதன்மூலம் பேருந்து இருக்கைகளின் எண்ணிக்கை 52 இருக்கைகளாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 1,400 பேருந்துகள் புதிதாக புனரமைப்பு செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.