நாக்பூர்:
ஆர்எஸ்எஸ் காரர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பசுவை தெய்வமாக வணங்க வேண்டும்; பசுக்களை சாப்பிடக் கூடாது என ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி வரும் நிலையில், மோகன் பகவத்தின் இந்த பேச்சு பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
மேலும், இந்தக் கூட்டத்தில் இடஒதுக்கீட்டை ஆதரித்தும், சமூகத்தில் சாதி பிரிவினை நிலவுவது குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். இதுதொடர்பாக நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் மோகன் பகவத் பேசியதாவது:
சமூகத்தில் சக மனிதர்களையே நாம் பின்தங்கிய நிலையில் வைத்திருக்கிறோம். கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக இந்த சாதி பாகுபாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. தலித் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் விலங்குகளை போல வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களை பற்றி நாம் கவலைப்பட்டதில்லை. இப்படி 2000 ஆண்டுகளாக இந்த சாதி பாகுபாடு தொடர்வதால் அடுத்த 200 ஆண்டுகளுக்காவது நாம் கஷ்டப்பட வேண்டும்.
முளைத்து மூன்று இலை விடாத இவர்.. சனாதனத்தை ஒழிக்கப் போறாராம்..? உதயநிதியை விளாசிய அண்ணாமலை
சாதி பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, தற்போது பல வழிகளில் சரி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் இடஒதுக்கீடு. அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீடு முறைக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குவோம் என மோகன் பகவத் கூறினார்.
இஸ்லாத்தை வேரறுப்பேன் என உதயநிதி சொன்னால் என்ன நடக்கும்..? அண்ணாமலை ஆவேசம்
தொடர்ந்து பேசிய மோகன் பகவத், “ஒரு முறை மறக்க முடியாத சம்பவம் நடைபெற்றது. ஒரு சமபந்தி விருந்துக்கு ஆர்எஸ்எஸ் காரர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு சாப்பாடு பரிமாறப்பட்டது. அப்போது அதில் இறைச்சிகளும் இருந்தன. மேலும், அவை மாட்டிறைச்சி என்றும் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், விருந்து நடத்துபவர்களை அவமதிக்கக்கூடாது என்பதற்காக மாட்டிறைச்சியை ஆர்எஸ்எஸ் காரர்கள் சாப்பிட்டார்கள்” என அவர் கூறினார்.
இடஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும்; மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் குரலாக இருந்து வந்தது. மோகன் பகவத் கூட இதனை பல முறை கூறியிருக்கிறார். இந்த சூழலில், மோகன் பகவத்தின் இந்த பேச்சு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 5 மாநிலத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மோகன் பகவத் இவ்வாறு பேசியிருக்கலாம் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.