இடுக்கி அணை பாதுகாப்பில் குளறுபடி அத்துமீறி நுழைந்த மர்ம நபர்| A mysterious person trespassed in Idukki Dam security

மூணாறு:இடுக்கி அணை பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது தெரிய வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை ‘ஆர்ச்’ வடிவிலும் செருதோணி அணை நேர் வடிவிலும் அருகருகே கட்டப்பட்டுள்ளன. அணையின் தண்ணீரைக் கொண்டு மூலமற்றம் நீர் மின்நிலையத்தில் 780 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது. ஆண்டு முழுவதும் அணை பலத்த பாதுகாப்பில் இருக்கும். ஓணம், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்களில் மட்டும் குறிப்பட்ட நாட்கள் வரை அணையைக் காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

குளறுபடி: இந்நிலையில் பலத்த பாதுகாப்பு வளைத்திற்கு உட்பட்ட அணையில் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. செருதோணி அணை பகுதியில் ‘ஹைமாக்ஸ்’ லைட் டைமரில் பூட்டுகள் தொங்குவதை இரு தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் கண்டனர்.

அது தொடர்பாக ஆய்வு நடத்தியபோது டைமர், எர்த் வயர் ஆகியவற்றை இணைத்து 11 பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதே போல் அணையின் ஷட்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ள வடத்தில் (கயிறு) ஒரு வித திரவம் ஊற்றப்பட்டதையும் கண்டறிந்தனர்.

அதனை தொடர்ந்து அணையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது ஜூலை 22ல் மதியம் 3:15 மணிக்கு மர்ம நபர் அணையில் அத்துமீறி நுழையும் காட்சி பதிவாகி இருந்தது. திருச்சூர் மாவட்ட பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர் பாலக்காட்டைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது.

இடுக்கி போலீசில் அதிகாரிகள் புகார் அளித்தனர். அணை பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்ட நிலையில் அது குறித்து ஒன்றரை மாதத்திற்கு பிறகு தெரிய வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.