‘விவாகரத்து வழக்குகளில், சித்ரவதை அல்லது கொடுமை என்று பெண் கூறுவது, ஆணுக்கு சித்ரவதையாக தெரியாது. அதனால், இந்த விவகாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப நீதிமன்றங்கள் முடிவு செய்ய வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது
விவாகரத்து தொடர்பான ஒரு வழக்கில், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாவது:
ஹிந்து திருமணச் சட்டத்தின், 13வது பிரிவில், சித்ரவதை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான விளக்கம் அதில் கூறப்படவில்லை. எந்தந்த காரணங்களைக் கூறி விவகாரத்து கோரலாம் என்பதை குறிக்கும் வகையில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
தாம்பத்திய உறவில், ஒரு பெண் சித்ரவதையாக கருதுவதை, ஆண் அவ்வாறு உணராமல் இருக்கலாம். அதனால், வழக்கின் தன்மை, சூழ்நிலைக்கு ஏற்ப இந்த விஷயத்தில் நீதிமன்றங்கள் தகுந்த முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement