ஜி20 மாநாடு: முதன்முறையாக இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ஜோபைடன்| G20 Summit: US President Joe Biden visited India for the first time

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரதமர் இல்லம் சென்று மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

முதன்முறையாக இந்தியாவில் ஜி 20 மாநாடு நாளை (செப்.09) டில்லி பிரகதி மைதானமான பாரத் மண்டபத்தில் துவங்குகிறது. இதில் பங்கேற்க ஜி 20 நாடுகளின் தலைவர்கள் டில்லி வந்த வண்ணம் உள்ளனர்.

மோடியுடன் சந்திப்பு

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இரவு 7;12 மணியளவில் டில்லி பாலம் விமான நிலையம் வந்திறங்கினார். அவரை அமெரிக்க தூதர் கார்சிட்டி வரவேற்றார்.இதையடுத்து ஜோபைடன் பிரதமர் இல்லத்திற்கு சென்று மோடியை சந்திக்க உள்ளார். பைடனுக்கு மோடி சிறப்பு விருந்தளிக்கிறார். இரு தலைவர்களும் இருதரப்பு பரஸ்பரம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். மேலும் அமெரிக்காவின் ஜிஇ இந்தியாவின் எச்.ஏ.எல். இடையே ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

முதன்முறை

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக ஜோபைடன் இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.