வாரணாசி: உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோவிலை ஒட்டி ஞானவாபி வளாகம் அமைந்துள்ளது.
இதை, கடந்த 17ம் நுாற்றாண்டில், முகலாய மன்னர் அவுரங்கசீப், இங்கு இருந்த கோவிலை இடித்து, அதன் மீது கட்டியதாக, ஹிந்துக்கள் சிலர் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதையடுத்து, இந்த வளாகத்தில் அறிவியல் பூர்வமாக விரிவான ஆய்வு நடத்தும்படி தொல்லியல் துறைக்கு, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அஞ்சுமன் இன்டேஸாமியா மஸ்ஜித் குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நடந்த விசாரணையில், தொல்லியல் துறையின் ஆய்வுக்கு அலகாபாத் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. கடந்த மாதம் 4ம் தேதியிலிருந்து ஆய்வு நடந்து வரும் சூழலில், மேலும் எட்டு வாரங்களுக்கு ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு அனுமதி அளித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், அது தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்ய நேற்று உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement