பயங்கரவாதிகள் வெறிச்செயல்: 64 பேர் பலி | Terrorist rampage: 64 killed

பமாகோ,- மாலியில் பயங்கரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில், பாதுகாப்பு படை வீரர்கள், 15 பேர் உட்பட, 64 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியின் திம்புக்டு நகரில் உள்ள நதியில் சென்ற பயணியர் படகை குறிவைத்து, நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; இதேபோல், காவ் பகுதியில் உள்ள ராணுவ முகாமிலும் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இந்த இரு தாக்குதல் சம்பவங்களிலும், 49 பொதுமக்கள், 15 பாதுகாப்பு படை வீரர்கள் என மொத்தம், 64 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு, அல் குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஜே.என்.ஐ.எம்., எனப்படும் ஜமாத் நஸ்ரல் இஸ்லாம் வால் முஸ்லிமின் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு, ராணுவத்தினர் தந்த பதிலடியில், 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.