'பி' டிவிசன் கைப்பந்து போட்டி: சென்னையில் 17-ந் தேதி தொடங்குகிறது

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட ஆண்களுக்கான ‘பி’ டிவிசன் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 15-ந் தேதிக்குள் செயலாளர், சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை-8 என்ற முகவரியிலோ அல்லது chennaidistrictvolley [email protected] என்ற மின்னஞ்சலிலோ தங்களது பெயரை பதிவு செய்யலாம் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சி.ஸ்ரீகேசவன் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.