15 இடங்களில் இறுதி ஆய்வு
தெலங்கானா மாநிலத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெலங்கானாவில் ரயில் இணைப்பை வலுப்படுத்த புதிய ரயில் பாதைகளுக்கு ரயில்வே அமைச்சகம் சுமார் 15 இடங்களில் இறுதி ஆய்வுகளுக்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ரூ. 50,848 கோடி மதிப்பு
அதன்படி 50,848 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 2647 கிமீ தூரம் வரை ரயில் பாதைகளை நீட்டிக்கவும் புதிய ரயில் பாதைகளை அமைக்கவும் மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் சுமார் 2588 கிமீ தூரத்திற்கு இருவழித்தடம், மூன்று வழித்தடம், நான்கு வழி தடங்கள் அமைக்க 11 இடங்களில் இறுதிக்கட்ட ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் செலவு 32,695 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த 5 நாளைக்கு ரெட் அலர்ட்… தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை… தமிழகத்திற்கு சூப்பர் நியூஸ்!
புதிய ரயில் பாதை
பதன்செருவு (நாகலபள்ளி) – அடிலாபாத் புதிய ரயில் பாதைக்கான இறுதி இடத்திற்கான ஆய்வுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையானது சுமார் 317 கி.மீ தூரம் வரை நீட்டிக்கப்படலாம் இதற்கு 5,706 கோடி ரூபாய் செலவாகும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு தெலங்கானா
குறிப்பாக வடக்கு தெலங்கானாவில் உள்ள பல புதிய மற்றும் இணைக்கப்படாத இடங்களை இந்த பாதை இணைக்கும் என்றும் தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இச்சோடா, நெரடிகொண்டா, தனூர், நிர்மல், பால்கொண்டா, ஆர்மூர், போதன், ருத்ரூர், நஸ்ருல்லாபாத், பன்ஸ்வாடா, நிஜாம்சாகர், அலஹதுர்க், சங்கரெட்டி மற்றும் படன்செருவு போன்ற முக்கிய நகரங்களுக்கு ரயில் இணைப்பை வழங்கும் என்றும் மத்திய தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஜி 20 மாநாடு: தினை தாலி.. மசாலா தோசை… தால்பாடி சுர்மா.. தங்கத்தட்டில் பரிமாறப்படும் பாரம்பரிய சைவ உணவுகள்!
ஹைதராபாத் டெல்லி
மேலும் புதிய ரயில் பாதை ஏற்கனவே உள்ள பிரதான பாதையை இணைப்பதன் மூலம் ஹைதராபாத் மற்றும் டெல்லியுடன் புதிய இடங்கள் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மத்திய தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய ரயில்வே அமைச்சகம் தெலங்கானாவுக்கு வழங்கியுள்ள இந்த மாஸ் திட்டத்தால் அம்மாநிலத்தின் ரயில் போக்குவரத்து மேம்படுவதோடு மாநிலத்தின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும் என கூறப்படுகிறது.