விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 12ம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகையை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, நடிகர் விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் […]