இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற ஹேட்ச்பேக் i20 காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆரம்ப விலை ரூ.6,99,490 முதல் டாப் வேரியண்ட் ரூ.11,01,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2023 Hyundai i20 Facelift
ஹூண்டாய் i20 காருக்கான தற்போதைய என்ஜின் வரிசையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுகிறது. தற்போதைய i20 மாடலில் 82bhp பவர் மற்றும் 115Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மட்டும் வந்துள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் IVT மேனுவல் உள்ளது.
1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது.
2023 i20 காரில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. பிரீமியம் ஹேட்ச்பேக் காரில் ஆறு ஏர்பேக்கு, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் (HAC), வாகன நிலைப்புத்தன்மை மேலாண்மை (VSM), மூன்று-புள்ளி சீட்பெல்ட் மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் நினைவூட்டல் ஆகியவற்றை பெறுகிறது.
புதிய i20 மாடல் எல்இடி ரன்னிங் விளக்குடன் எல்இடி ஹெட்லேம்ப் பெற்று மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன் மற்றும் பின்புற பம்ப்பர் பெற்றுள்ளது. புதிய 16-இன்ச் அலாய் வீல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பின்புறம் கொண்ட திருத்தப்பட்ட கிரில் பகுதியைப் பெறுகிறது.
புதிய டூயல் டோன் கொண்ட சாம்பல் மற்றும் கருப்பு தீம் பெற்ற டேஸ்போர்டு அரை-லெதரெட் இருக்கை வடிவமைப்பு பெற்றுள்ளது.
புதிய அமேசான் கிரே நிறத்துடன் அட்லஸ் ஒயிட், டைட்டன் கிரே, டைபூன் சில்வர், ஸ்டாரி நைட், சிவப்பு, அட்லஸ் ஒயிட் + பிளாக் ரூஃப் மற்றும் சிவப்பு + கருப்பு ரூஃப் ஆகிய நிறங்கள் பெறுகிறது.
Hyundai facelifted i20 (all prices, ex-showroom)
i20 facelift Era MT Rs. 6.99 லட்சம்
i20 facelift Magna MT Rs. 7.70 லட்சம்
i20 facelift Sportz MT Rs. 8.33 லட்சம்
i20 facelift Sportz IVT Rs. 9.38 லட்சம்
i20 facelift Asta MT Rs. 9.29 லட்சம்
i20 facelift Asta (O) MT Rs. 9.98 லட்சம்
i20 Facelift Asta (O) IVT Rs.10.01 லட்சம்