மக்களவை தேர்தலை நோக்கி இந்திய அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கையில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி இடையில் காரசார மோதல்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் வந்து பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
எந்தெந்த தொகுதிகள் என்று பார்த்தால்,
பாகேஸ்வர், உத்தரகாண்ட்
கோஷி, உத்தரப் பிரதேசம்
புதுப்பள்ளி, கேரளா
துப்குரி, மேற்குவங்கம்,
தும்ரி ஜார்க்கண்ட்
பாக்ஸாநகர், திரிபுரா
தன்பூர், திரிபுரா
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு
இதில் 3 தொகுதிகள் (தன்பூர், பாகேஸ்வர், துப்குரி) பாஜக வசமும், தலா ஒரு தொகுதி சமாஜ்வாதி (கோஷி), சிபிஎம் (பாக்ஸாநகர்), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (தும்ரி), காங்கிரஸ் (புதுப்பள்ளி) வசம் இருந்தது. மேற்குறிப்பிட்ட 7 தொகுதிகளிலும் கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இந்த சூழலில் இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் பிற்பகலுக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் எனக் கூறுகின்றனர்.
Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தியா vs தேசிய ஜனநாயக கூட்டணி
இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுமா? இல்லை இந்தியா கூட்டணி வெற்றி பெறுமா? என அரசியல் நோக்கர்கள் உற்றுநோக்கி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் கோஷி தொகுதியை பொறுத்தவரை சமாஜ்வாதி கட்சி தலைவரும், ஓபிசி தலைவருமான தாரா சிங் சவுகான் பாஜகவில் இணைந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது.
பாகேஸ்வர் தொகுதி
இங்கு நடந்த இடைத்தேர்தலில் 49.42 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வர் தொகுதியில் அமைச்சர் ராம் தாஸ் திடீரென காலமானதால் இடைத்தேர்தல் வந்துள்ளது. இவர் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 4 முறை எம்.எல்.வாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு நடந்த இடைத்தேர்தலில் 55.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வாக்குப்பதிவு சதவீதம்
ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி சட்டமன்ற தொகுதியில் கிட்டதட்ட தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி இடையிலான மோதலை போன்றது தான். இங்கு 64.84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வரில் 55.35 சதவீத வாக்குகள் பதிவாகின. திரிபுரா மாநிலம் பாக்ஸாநகரில் 86.34 சதவீதமும், தன்பூரில் 81.88 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. மேற்குவங்க மாநிலம் துப்குரியில் 74.35 சதவீதமும் பதிவாகியுள்ளன.