ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி.வாசுவின் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவான திரைப்படம் தான் சந்திரமுகி 2 . கங்கனா ரணாவத் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையில் வெளியாகவதாக இருந்தது. ஆனால் தற்போது VFX வேலைகள் காரணமாக இப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.