டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறவிருக்கிறது. செப்டம்பர் 9-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர்களுக்கும், அனைத்து மாநில முதலமைச்சர்களும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிபர்களும், உள்நாட்டு தலைவர்களும் பங்கேற்கவிருக்கின்றனர். இரவு விருந்து நிகழ்ச்சி நாளை பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்திலுள்ள மல்டி-ஃபங்க்ஷன் ஹாலில் நடைபெறுகிறது.
இந்திய அரசின் அனைத்து செயலாளர்கள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களும் விருந்தினர் பட்டியலில் உள்ளனர். முன்னாள் பிரதமர்கள் டாக்டர் மன்மோகன் சிங், எச்டி தேவகவுடா ஆகியோரும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் இரவு விருந்தில் கலந்து கொள்வதை உறுதி செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அவரது அலுவலகம் தெரிவித்திருக்கிறது. விருந்துக்காக அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரும், நாளை காலை 6 மணிக்குள் நாடாளுமன்ற வளாகத்துக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.
அவர்களை அங்கிருந்து பாரத மண்டபத்துக்கு அழைத்துச் சென்று, விருந்து விழா முடிந்ததும் திரும்பவும் நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டுவரச் சிறப்புப் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என மாநாட்டிற்கான செயல்பாடுகளைக் கவனித்துக்கொள்ளும் முக்தேஷ் பர்தேஷி தெரிவித்திருக்கிறார். இந்த விருந்தில் கலந்துக்கொள்ள முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி புறப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY