படங்கள், டிவி சீரியல்களில் நடித்து வந்த மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேச சென்னை வடபழனியில் இருக்கும் ஸ்டுடியோவுக்கு சென்ற அவர் பிணமாக வீடு திரும்பியிருக்கிறார்.
பிச்சிகிட்டு போன ஜவான் பட்ஜெட் – படக்குழு தப்பிக்க வாய்ப்பு இருக்கா.?
நன்றாக இருந்த மாரிமுத்து இப்படி திடீரென்று இறந்துவிட்டாரே என பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 படத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
கொரோனா வைரஸ் பிரச்சனை எல்லாம் துவங்கும் முன்பே இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது. செட்டில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த பிறகு நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு அணமையில் தான் துவங்கி நடந்து முடிந்தது.
இதற்கிடையே இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதன் பிறகு அதே படத்தில் நடித்த மனோபாலா மாரடைப்பால் இறந்தார். தற்போது மாரிமுத்துவும் மாரடைப்பால் இறந்துவிட்டார்.
மேலும் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த மலையாள நடிகரான நெடுமுடி வேணு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வந்தபோது உயிரிழந்தார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்
இந்தியன் 2 படத்தில் நடித்த 4 பேர் இறந்துவிட்டார்கள். அந்த படத்தை தியேட்டரில் பார்க்கும்போது அந்த 4 பேரையும் நினைத்து ரசிகர்கள் நிச்சயம் வேதனைப்படுவார்கள்.
இந்தியன் 2 படத்தில் நடித்த மூன்று தமிழ் நடிகர்களும் சொல்லி வைத்தது போன்று மாரடைப்பால் இறந்திருக்கிறார்கள். அடுத்தவர்களை மகிழ்விக்க நடிக்கும் கலைஞர்களுக்கு ஏன் அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுகிறது என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.
Ethirneechal:எனக்கு ஏதோ கெட்டது நடக்கப்போகுதுனு தோனுது, நெஞ்சுவலியா வந்து காட்டுது: எதிர்நீச்சலில் மாரிமுத்து பேசியது நடந்துடுச்சே
தேனியை சேர்ந்த மாரிமுத்து படங்களை இயக்கும் ஆசையில் ஊரை விட்டு சென்னைக்கு வந்தார். தான் ஆசைப்பட்டது போன்றே இயக்குநரும் ஆனார். மேலும் பல படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
சென்னையில் பல காலம் வாழ்ந்தபோதிலும் மதுரை தமிழை அவர் மறக்கவில்லை. அந்த மண் வாசம் அவரை விட்டு போகவில்லை. அதுவும் மாரிமுத்துவிடம் ரசிகர்களுக்கு பிடித்த விஷயம் ஆகும்.
தான் படங்களில் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் நடந்த விஷயங்களை எல்லாம் பேட்டிகளில் சுவாரஸ்யமாக கூறி வந்தார் மாரிமுத்து. அவர் சொன்ன விஷயங்களும், சொன்ன விதமும் அனைவருக்கும் பிடித்திருந்தது.
Marimuthu:எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசியபோது மாரிமுத்து மாரடைப்பால் மரணம்
அதனால் அடிக்கடி ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வந்தார். பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் மட்டும் மாரிமுத்து கலந்து கொண்டால் வேற லெவலில் இருக்கும் என பார்வையாளர்கள் ஆசைப்பட்டார்கள். பிக் பாஸ், தயவு செய்து எதிர்நீச்சல் குணசேகரனை அழைத்து வாங்க என கோரிக்கையும் விடுத்தார்கள்.
குணசேகரன் இல்லா எதிர்நீச்சல் சீரியலா?. வாய்ப்பே இல்லை. அவரை சீரியல் ஆட்கள் அனுப்பி வைக்க மாட்டார்கள் என்று கூறிய நிலையில் மாரிமுத்து இந்த உலகை விட்டே போய்விட்டார்.