iQoo 12 : 200W சார்ஜிங் , E7 OLED டிஸ்பிளே, 1TB ஸ்டோரேஜ் என இணையத்தில் கசிந்துள்ள எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்!

விவோ நிறுவனத்தின் மொபைல் பிராண்டான iQoo தனது iQoo 11 மொபைலை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இது அடுத்து வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும் iQoo 12 மொபைலில் இடம்பெறப்போகும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் பலவும் இணையத்தில் அடிக்கடி பரவி வருகின்றன. இந்நிலையில், அதன் டிஸ்பிளே குறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

​iQoo 12 டிஸ்பிளேiQoo 12 மாடலில் இடம்பெறும் டிஸ்பிளே குறித்து டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவலில் 2K ரெசல்யூஷன் E7 OLED டிஸ்பிளே மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் இடம்பெறும் என்று கூறியுள்ளார்.
​iQoo 12 லான்ச்2024ம் ஆண்டின் முதல் காலாண்டில் iQoo 12 சீரிஸ் மொபைல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் iQoo 12 மற்றும் iQoo 12 Pro மொபைல்கள் இடம்பெறலாம். இவற்றில் அதிநவீன சார்ஜிங் வசதி, கேமரா மற்றும் டிஸ்பிளே ஆகியவை இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
​iQoo 12 ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ்டிப்ஸ்டர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி iQoo 12 மொபைலில் Snapdragon 8 Gen 3 SoC ப்ராசஸர் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், 24GB ரேம் வசதி மற்றும் 1TB ஸ்டோரேஜ் வசதி இடம்பெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
​iQoo 12 பேட்டரிiQoo 12 மொபைலில் இடம்பெறப்போகும் சூப்பர் லார்ஜ் பேட்டரிக்கு ஏற்ற வகையில் 200W திறனுள்ள சார்ஜிங் வசதி இதில் இடம்பெற போவதாகவும் டிப்ஸ்டர்கள் தெரிவித்துள்ளனர்.
​iQoo 12 கேமராடிப்ஸ்டர்களின் தகவலின்படி, iQoo 12 மொபைலின் மெயின் ரியர் கேமராவில் OmniVision OV50H சென்சார் 50 மெகாபிக்ஸல் கேமரா இடம்பெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், OmniVision OV64B சென்சார் 64 மெகாபிக்ஸல் பெரிஸ்கோப் ஜூம் கேமரா இடம்பெறலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.