விஜய்யின் லியோ திரைப்படத்தை தான் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் என்னதான் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனவே லியோ படத்தின் மூலம் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என்பதில் தளபதி உறுதியாக இருக்கின்றார்.
அதன் காரணமாகத்தான் இப்படத்தை முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலிலேயே எடுக்க சம்மதித்துள்ளார் விஜய் என ஒரு கருத்து பரவி வருகின்றது. இது ஒருபக்கம் இருக்க விஜய் ரசிகர்கள் அனைவரும் லியோ திரைப்படம் எத்தனை கோடி வசூலிக்கும் என்பது பற்றி தான் விவாதித்து வருகின்றனர்.
Atlee next: கதை சொல்ல வரவா என கேட்ட அட்லி..அதற்கு தளபதியின் பதில் என்ன தெரியுமா ?
ஏனென்றால் சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலில் சாதனை படைத்தது. எனவே அந்த சாதனையை லியோ திரைப்படம் முறியடிக்கவேண்டும் என விஜய் ரசிகர்கள் கங்கணம் கட்டி வருகின்றனர். சமீபகாலமாக விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே கடுமையான மோதல்கள் வெடித்து வருகின்றது. எனவே இதன் காரணமாகத்தான் லியோ வசூல் ஜெயிலர் படத்தின் வசூலை முந்தவேண்டும் என விஜய் ரசிகர்கள் குறிக்கோளாக இருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது லண்டனில் லியோ படத்தின் ஹிந்தி வெர்ஷனுக்கான ஓப்பனிங் துவங்கியுள்ளது. துவங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் மொத்தமும் விற்று தீர்ந்துவிட்டதாம். ஹிந்தி வெர்ஷனுக்கே இப்படி என்றால் தமிழ் வெர்ஷன் வெளியாகும்போது எப்படி இருக்கும் என ரசிகர்கள் தற்போதே பேசி வருகின்றனர்.
மேலும் லியோ திரைப்படம் தமிழில் சோலோவாக வெளியாவதால் போட்டியின்றி பந்தயம் அடிக்கும் என்றே ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் லியோ திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூலை எட்டும் என ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர். அப்படி நடந்தால் ஆயிரம் கோடி வசூலை எட்டும் முதல் திரைப்படம் என்றே பெருமையை லியோ பெரும்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மேலும் படம் வெளியாக இன்னும் 40 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில் லியோ படத்தின் ப்ரீ புக்கிங் தற்போதே துவங்கியுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கின்றது. இப்போதே துவங்கினால் தான் ஓவர்சீஸ் வசூலில் சாதனை படைக்கலாம் என தளபதி தான் யோசனை சொன்னதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது