Marimuthu : மாரிமுத்து இயக்கிய படத்தின் ஹீரோ நேரில் சென்று அஞ்சலி !

சினிமா இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் சொந்த ஊரிலிருந்து சென்னை வந்தவர்தான் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து. தொடக்க காலத்தில், சினிமா வாய்ப்பு கிடைக்காததால் ஹோட்டலில் வெய்ட்டராக பணி புரிந்தார். பின்னர், சில முன்னணி இயக்குனர்களுடன் துணை இயக்குனராக பணி புரிந்தார். சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார் மாரிமுத்து.

நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து

இவரின் ஆசைப்படி இவர் இயக்கிய முதல் படம் ‘கண்ணும் கண்ணும்’. இந்த படத்தில், நடிகர் பிரசன்னா, உதயஸ்ரீ, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் 2008ல் வெளியானது. இயக்குனராக வேண்டும் என்ற அவரது கனவினை நினைவாக்கிய படம் தான் ‘கண்ணும் கண்ணும்’. இந்த படத்திற்கு பிறகு படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார் மாரிமுத்து.

இயக்குனர் மாரிமுத்துவின் படங்கள்

அவர் மறைவு தமிழ் சினிமாவின் பெரிய இழப்பு ! தமிழ் சினிமாவில் மாரிமுத்து

இயக்குனர் மாரிமுத்து அவரின் முதல் பட ஹீரோவுடனேயே தனது இரண்டாவது படத்தையும் இயக்கினார். பிரசன்னா, விமல், ஓவியா, அனன்யா நடிப்பில் வெளியான புலி வால் படத்தை இயக்கினார் மாரிமுத்து. இந்த படம் 2014ல் வெளியானது.

Marimuthu : என் குடும்பத்தை சந்தோஷமாக வைத்திருக்கிறேன் ! அது போதும் ..
கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இன்று காலமான இயக்குனருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் பிரசன்னா. மாரிமுத்து இயக்கிய இரண்டு படங்களிலுமே பிரசன்னா தான் ஹீரோவாக நடித்திருப்பார். அந்த வகையில், பிரசன்னா மற்றும் மாரிமுத்து மிகவும் நெருக்கமானவர்கள் என தெரிகிறது. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாரிமுத்துவின் இரங்கல் குறித்து பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் பிரசன்னாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்

அதில், ” இயக்குனர் மாரிமுத்துவின் இறப்பினை கேட்டு மிகவும் உடைந்துவிட்டேன், நாம் இருவரும் சேர்ந்து கண்ணும் கண்ணும், புலி வால் படங்களில் வேலை பார்த்திருக்கிறோம், அண்ணன் தம்பி போன்ற உறவை கொண்டுள்ளோம், பல விஷயங்கள் வேண்டாம் என்பதில் நாம் ஒத்துப்போனோம், அவரின் வாழ்க்கை சுலபமானதாக இல்லை. நடிகராக, சமீபத்தில் மிகவும் சிறப்பாக செய்து வந்தார், இன்னும் பல நாட்களுக்கு அவர் இருந்திருக்க வேண்டும், சோகமான இரங்கல், போய்ட்டுவாப்பு” என பதிவிட்டிருந்தார் நடிகர் பிரசன்னா.

இவரது இறப்பினை சற்றும் எதிர்பார்த்திடாத சினிமா பிரபலங்கள் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Guest Author : Radhika Nedunchezhian

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.