பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெறும் ஹரியானாவின், முதல்வராக இருப்பவர் மனோகர் லால் கட்டார். சமீபத்தில் இவர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில், கோரிக்கை முன்வைத்தப் பெண்ணை கேலி செய்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் தனது பக்கத்துக் கிராமமான படோல் ஜட்டனில் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒரு தொழிற்சாலையை அமைக்குமாறு கோரிக்கையை முன்வைத்தார்.
அதற்கு ஹரியானாவின் முதல்வர் மனோகர் லால் கட்டார், “அடுத்த முறை சந்திராயன்-4 மூலம் நீங்கள் சந்திரனுக்கு அனுப்பப்படுவீர்கள். இப்போது உட்காருங்கள்” எனக் கேலி செய்யும் விதமாகப் பதிலளித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர்கள் சிலர் அந்த வீடியோவை தங்கள் X பக்கங்களில் பகிர்ந்து கடுமையாகச் சாடிவருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “பெண்கள் மீதான அவமதிப்பும், அவமரியாதை உணர்வும் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்-ன் டி.என்.ஏ-விலேயே இருக்கிறது. ஹரியானாவின் பா.ஜ.க முதல்வர், அதிகார ஆணவத்தில், வெட்கமின்றி பெண்களுக்கு எதிரான சிந்தனையை வெளிப்படுத்துகிறார்.
பெண்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் ஒரு தொழிற்சாலை வேண்டும் என்று கேட்கும் பெண்ணிடம், அடுத்த முறை சந்திரயான் நிலவுக்குச் செல்லும் போது, அதில் உங்களை அனுப்புகிறேன் என பகிரங்கமாகக் கிண்டல் செய்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து ஆம் ஆத்மி, “ஹரியானாவில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. சேவை செய்யப் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இன்று பொதுமக்களைக் கேலி செய்கிறார்கள். இது அந்த மாநில முதலமைச்சருக்கு அவமானம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY