சென்னை இன்று உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்கொலை என்பது உலகம் முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பலர் தனிப்பட்ட காரணங்கள், குடும்ப காரணங்கள் என பல்வேறு காரணங்களுக்காகத் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து வருகின்றனர். எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு கிடையாது. எந்த பிரச்சினையும் தற்கொலையால் தீரப்போவதில்லை. உலக நாடுகள் தற்கொலையைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. […]